உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி பண்டிகை; ரூ. 1.25 கோடி விற்பனை கோ-ஆப்டெக்ஸ் இலக்கு 

தீபாவளி பண்டிகை; ரூ. 1.25 கோடி விற்பனை கோ-ஆப்டெக்ஸ் இலக்கு 

திருப்பூர் : நடப்பாண்டில் தீபாவளி விற்பனைக்கு திருப்பூர் மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் 1.25 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நேற்று துவங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- - ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகையின் போது, சிறப்பு விற்பனை மேளா நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் நடப்பாண்டு தீபாவளி விற்பனைக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ்ன், நடப்பாண்டு தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா திருப்பூர் விற்பனை நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் மணீஷ் நாரணவரே துவக்கி வைத்தார். முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் ஜெகநாதன், துணை மண்டல மேலாளர் லட்சுமி பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நிலைய மேலாளர் கவிதா வரவேற்றார். மேலாளர் பிரபு நன்றி கூறினார். நடப்பாண்டு புதிய டிசைன் பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டை, சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்ட கோ- - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்தாண்டு, 92 லட்சம் ரூபாய் விற்பனை நடைபெற்றது. நடப்பாண்டு திருப்பூர் நிலையத்தில், 85 லட்சம், உடுமலையில், 40 லட்சம் ரூபாய் என மொத்தம், 1.25 கோடி ரூபாய் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை