கொடிக்கம்பம் அகற்றம் தி.மு.க., வேண்டுகோள்
திருப்பூர் : நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., செயலாளர் செல்வராஜ்; தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.''கட்சி தலைமை பிறப்பித்துள்ள உத்தரவைப் பின்பற்றியும், மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவைக் குறிப்பிட்டும், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இது குறித்து தகவல்களை உடனடியாக மாவட்ட தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.