சாலை கீழே... மூடி மேலே!
கசிவுதிருப்பூர், 17வது வார்டு, இ.ஆர்.பி., நகர், பாரதிதாசன் தெருவில், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைந்துள்ளது. அடிக்கடி தண்ணீர் கசிகிறது. சரிசெய்ய வேண்டும்.- ரஞ்சித், இ.ஆர்.பி., நகர். (படம் உண்டு)உயரம்திருப்பூர், நொய்யல் ஆற்றை ஒட்டி செல்லும் சாலையில், பாதாள சாக்கடை மூடி சாலையை விட உயரமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். வெள்ளை பெயின்ட் அடித்து அடையாளப்படுத்த வேண்டும்.- ரத்தினவேல், நொய்யல் வீதி. (படம் உண்டு)இருள்திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னல் சந்திப்பில், பாதி மின் விளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி, புதிய விளக்கு பொருத்த வேண்டும்.- மோகன், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)திருப்பூர், பார்க் ரோடு - குமரன் ரோடு இடையே, பின்னி காம்பவுண்ட் சந்திப்பு சாலையில், 15 நாட்களாக தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது.- செந்தில்குமார், குமரன் ரோடு. (படம் உண்டு)பல்லாங்குழிபயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், திருப்பூர் பார்க் ரோடு அடிக்கடி சேதமாகி விடுகிறது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை கவனித்து 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.(படம் உண்டு)அசுத்தம்திருப்பூர், 50வது வார்டு, தாராபுரம் ரோடு, கே.பி.ஜி., வீதி சந்திப்பு மெயின் வீதிக்கு முன் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. முட்புதர்கள் வளர்ந்துள்ளன. சுத்தம் செய்ய வேண்டும்.- ராஜேந்திரன், பத்மினிகார்டன். (படம் உண்டு)பழுதுதிருப்பூர் ரயில்வே ஸ்டேஷன், டிக்கெட் முன்பதிவு மைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதாகியுள்ளது. குடிநீரின்றி சிரமமாக உள்ளது.- ஆல்பர்ட், ஆண்டிபாளையம். (படம் உண்டு)விதிமீறல்திருப்பூர், பி.என்., ரோடு பூலுவப்பட்டி சிக்னலில் பாதசாரிகள் நடந்து செல்லும் போது வாகனங்களை நிறுத்தி மெதுவாக வாகன ஓட்டிகள் இயக்குவதில்லை. சிக்னல் போட்டிருந்தாலும், முன்னேறுகின்றனர். போலீசார் கண்டுகொள்வதில்லை.- கவிப்பிரியன், நெருப்பெரிச்சல். (படம் உண்டு)அபாயம்திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர்ப்பந்தல் காலனி கன்னிமார் கோவில் முன்புறம் உள்ள மின்கம்பத்தில் 'போர்டு' சேதமாகியுள்ளது. மின்விபத்து அபாயம் உள்ளது.- சிவசுப்ரமணியம், தண்ணீர்ப்பந்தல் காலனி. (படம் உண்டு)வீண்திருப்பூர், 15 வேலம்பாளையம், நேரு வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- விஜி லட்சுமி, நேரு வீதி. (படம் உண்டு)ரியாக் ஷன்சீரமைப்புதிருப்பூர், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் முன்புறம் உள்ள பஸ் ஸ்டாப் நிழற்குடையில் இருக்கைகள் சேதமானது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இருக்கைகள் சீரமைக்கப்பட்டன.- செல்வராஜ், மீனம்பாறை (படம் உண்டு)வெண்கோடுதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, தாமரைக்கோவில், ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி - வெற்றிவேல் நகர் சந்திப்பு மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், விபத்து அடையாளம் அறிய, வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.- அழகுராஜன், வெற்றிவேல் நகர். (படம் உண்டு)