உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியை சூழ்ந்த மழைநீர் அகற்றம்

பள்ளியை சூழ்ந்த மழைநீர் அகற்றம்

திருப்பூர்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், நொய்யல் வீதி பள்ளி முகப்பு மைதானத்தை சூழ்ந்திருந்த வெள்ளம் வெளியேற்றப்பட்டது.'மழைக்காலங்களில் மாணவர்கள் படும் பாடு' என்ற தலைப்பில், நேற்று, நம் நாளிதழில் புகைப் படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருந்தது.பெரும்பாலான ஊராட்சி, மாநகராட்சி பள்ளிகளின் முகப்பு மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது; பள்ளி கட்டடத்தை புதர் சூழ்ந்து, வகுப்பறைக்குள் விஷ ஜந்துகள் புகுந்து விடுகிறது என்பது போன்ற பல்வேறு, பிரச்னைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.இதில், திருப்பூர் நொய்யல் வீதி, மாநகராட்சி பள்ளி முகப்பில் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பது தொடர்பான புகைப்படமும் வெளியாகியிருந்தது.மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் பொருத்தப்பட்ட லாரி உதவியுடன், மழை வெள்ளம் உறிஞ்சி, அகற்றப்பட்டது. 'வகுப்பறையை சூழ்ந்துள்ள புதர் செடிகளும் விரைவில் அகற்றப்படும்' என, அதிகாரிகள் கூறியுள்ளனர் என, ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி