உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது

மத்திய பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சியால் நிறுவப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில், முழுமையாக குடிநீர் நிரப்புவதில்லை. நிறுவப்பட்ட 'ஆர்.ஓ., வாட்டர்' செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மதிய வேளை பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், குடிநீருக்கு பெரும் சிரமப்படுகின்றனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் நேற்று செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நேற்று காலை மாநகராட்சியின் குடிநீர் லாரிகள் மூலம் பிளாஸ்டிக் டேங்கில் தண்ணீர் முழுமையாக நிரப்பப்பட்டது.'ஆர்.ஓ., வாட்டர்' அறை திறக்கப்பட்டு, குழாய்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டு, ஆர்.ஓ., வாட்டர் பயணிகளுக்கு கிடைப்பதற்கான செயல்பாடுகளும் துவங்கப்பட்டன. பயணிகள் நிம்மதி அடைந்தனர்.''கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை இவ்வாறு தினசரி முழுமையாக டேங்கில் தண்ணீர் நிரப்ப வேண்டும்'' என்கின்றனர், பயணிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி