மேலும் செய்திகள்
மாணவர்களின் வழிகாட்டுதல்
28-Oct-2024
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், 'போதை இல்லா தமிழ்நாடு' எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.தலைமை வகித்த, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசுகையில், 'போதை பழக்கம் சாவை நோக்கி செல்லும் பாதை என்பதை மாணவர் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது அழகான பூந்தோட்டம், அது போதையால் போராட்டமாக மாற நீங்களே வழிவகுக்கக்கூடாது. அரசின் ஆணைப்படி நம் கல்லுாரியிலும் போதைமருந்து எதிர்ப்பு மையம் உருவாக்கப்படுகிறது,' என்றார்.மாணவ செயலர்கள் கிருஷ்ண மூர்த்தி, செர்லின், நவீன்குமார், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள், 'போதை அது நாம் காசு கொடுத்து வாங்கும் வேதனை', சிந்தித்து செயல்படு, போதை உனக்கு எதற்கு, போதை இல்லா தமிழ்நாடாக மாற்ற அரசுடன் இணைந்து செயல்படுவோம்,' ஆகிய உறுதிமொழிகளை வாசித்தனர்.
28-Oct-2024