உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவிகளை அழைத்துசெல்ல வந்த போதை டிரைவர்; வேன் பறிமுதல்

மாணவிகளை அழைத்துசெல்ல வந்த போதை டிரைவர்; வேன் பறிமுதல்

அவிநாசி; அவிநாசியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை, வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப், 21 என்பவர் தனது மாருதி ஆம்னி வேனில் வீட்டில் கொண்டுசென்று விடுவது வழக்கம். நேற்று பள்ளி அருகே வேனை நிறுத்திய பிரதீப்பை பார்த்த பிற மாணவியரின் பெற்றோர், அவர் போதையில் இருப்பதை அறிந்து அவிநாசி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். எஸ்.ஐ., லோகநாதன் உள்ளிட்ட போலீசார் பிரதீப்பிடம் விசாரித்தனர். போதையில் வாகனம் ஓட்டியதற்காக பிரதீப்புக்கு அபராதம் விதித்து வேனை பறிமுதல் செய்தனர். மாணவிகளை வேனில் இருந்து இறக்கி வாடகை ஆட்டோ மூலம் வீட்டிற்கு போக்குவரத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை