மேலும் செய்திகள்
'பேதை'யாக்கும் போதை!
01-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2, நல்லுார் போலீசார் சார்பில், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில், கலைநிகழ்ச்சிகளுடன், 'போதையில்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். நல்லுார் போலீஸ் உதவி கமிஷனர் தையல்நாயகி பேசுகையில், '' சுயமரியாதையை இழந்து, சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட போதை காரணமாகிறது. விலை கொடுத்து வாங்கும் விஷம் போதை. போதைப்பொருள்களை வேரறுக்க மாணவ, மாணவியர் துணை நிற்க வேண்டும்,'' என்றார். மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எஸ்.ஐ., வாசுகி நன்றி கூறினார்.
01-Oct-2025