உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ - நாம் ஏலத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு

இ - நாம் ஏலத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு

உடுமலை: உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்திற்கு அதிகளவு கொப்பரை வரத்து காணப்பட்ட நிலையில், விலையும் அதிரடியாக உயர்ந்து, ஒரு கிலோ ரூ.135.39க்கு விற்பனையானது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, உடுமலை, விளாமரத்துப்பட்டி, பூலாங்கிணர், நீலிகவுண்டம்பாளையம், சின்ன வீரம்பட்டி, புக்குளம், கோட்டமங்கலம், குரல்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 30 விவசாயிகள், 203 மூட்டை அளவுள்ள, 10 ஆயிரத்து, 150 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ரூ. 126.39 முதல், ரூ. 135.39 வரையும், இரண்டாம் தரம், ரூ. 102.26 முதல், 121.11 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''இங்கு, கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்ததால், 10 ஆயிரத்து, 150 கிலோ ஏலத்திற்கு வைக்கப்பட்டது. விலையும், கடந்த வாரத்தை விட, 10 முதல், 20 ரூபாய் வரை உயர்ந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !