உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காது-மூக்கு-தொண்டை சிகிச்சை ரேவதி மெடிக்கல் சென்டரில் முகாம்

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை ரேவதி மெடிக்கல் சென்டரில் முகாம்

திருப்பூர்: திருப்பூர், ரேவதி மெடிக்கல் சென்டரில் நேற்று காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம், சிறப்பு மருத்துவர் காயத்ரி தலைமையில் துவங்கியது. இன்றும் தொடர்கிறது.முகாமில் செவித்திறன் கண்டறியும் பரிசோதனை, எண்டோஸ்கோபி பரிசோதனை, காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.2,500 ரூபாய் மதிப்புள்ள 'சிடி' ஸ்கேன் பரிசோதனைகள் 1,500 ரூபாய்க்கும், காது கேட்கும் கருவிகளுக்கு 25 சதவீத கட்டண சலுகையும், பிற பரிசோதனைகளுக்கு 50 சதவீத கட்டண சலுகைகளும், அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணங்களும் வழங்கப்படுகிறது.சைனஸ் பிரச்னை, ஒவ்வாமை மற்றும் சைனஸ், குரல் கோளாறுகள், காதில் சீல் வடிதல், தொண்டைப் பிரச்னைகள், தைராய்டு நோய், ஆடியோகிராம் பரிசோதனை, குறட்டை டான்சில்ஸ், விழுங்குவதில் சிரமம், காது கேளாமை, அடினாய்டு, பேச்சு தாமதம், தலைசுற்றல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் பங்கேற்கலாம். 1,400 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கு பதிவு கட்டணமாக 200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.முன்பதிவுக்கு: 98422 09999; 98422 11116.இத்தகவலை ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ