உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி அதிகாரிகள் விசாரணை

மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி அதிகாரிகள் விசாரணை

திருப்பூர்; திருப்பூர் நொய்யல் வீதி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றியவர், சுந்தரவடிவேல், 52. பள்ளி மாணவ, மாணவியரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மாவட்ட குழந்தை நலக்குழுவினர் விசாரணை நடத்தினர்; ஆசிரியர் மீது 'போக்சோ' வழக்கு பதியப்பட்டது.கடந்த பிப்., 11ம் தேதி, புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை, கைது செய்தனர். சுந்தரவடிவேலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் சஸ்பெண்ட் செய்தார்.இந்நிலையில், நொய்யல் வீதி பள்ளியில், பழநி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பரிமளா தலைமையில் கல்வி அதிகாரிகள் குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். பள்ளி மாணவ, மாணவியர், புகார் தெரிவித்த பெற்றோர், தலைமை ஆசிரியர், சக ஆசிரியர் உள்ளிட்டோரிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.'பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்தின் உத்தரவையடுத்து, பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை விபரங்கள் அறிக்கையாக கல்வித்துறை உயர்அலுவலர்களுக்கு சமர்பிக்கப்படும்,' என, விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை