உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் நாளை மறுநாள் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

திருப்பூரில் நாளை மறுநாள் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

திருப்பூர்; ரோட்டரி திருப்பூர் தெற்கு சங்கம், ஒமேகா ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுநாள்(12ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.ஒமேகா ஈவன்ட்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்த பிறகு உயர்கல்வி படிப்பது தொடர்பான ஆலோசனைகள், தன்னம்பிக்கை பேச்சுகள், திரைத்துறை படிப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. காலை 9:00 மணியளவில் சிறப்பு அழைப்பாளராக டி.வி., புகழ் கோபிநாத் பங்கேற்று கல்வி ஆலோசனைகள் வழங்குகிறார். இன்ஜினியரிங், கலை அறிவியல், பார்மசி, பாலிடெக்னிக் உள்பட 100க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன அரங்குகள் இடம்பெறுகின்றன. கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கல்லுாரிகளும் பங்கேற்கின்றன. உயர்கல்வி குறித்த மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு ஒரே இடத்தில் விடை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை