உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாக்கில் தொங்கிய மூதாட்டி: போலீசார் தீவிர விசாரணை

துாக்கில் தொங்கிய மூதாட்டி: போலீசார் தீவிர விசாரணை

பொங்லுார்: திருப்பூர் அருகே துாக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொங்கலுார், அவிநாசிபாளையம், கண்டியன்கோவில், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் முத்துமணி, 74. மகன் லோகநாதன், திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்.இவர் தனது தாய், மனைவி, மகனுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று காலை மகனை பள்ளியில்விட்டு விட்டு, மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். தாய் இருந்து வந்த வீட்டின் காம்பவுண்ட் கேட் பூட்டாமல் இருப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்தார். தாய் முத்துமணி துாக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை