உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்

உடுமலை; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற, மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற திருப்பூர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம், உடுமலை சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்தது.மன்றத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில இலக்கிய அமைப்பாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாநில அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஏற்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.உடுமலை, மடத்துக்குளம், மூலனுார் வட்டார மன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் தங்கவேல் தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்தார்.ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜோதிராமன், செல்வராஜ் மாவட்ட செயற்குழுவின் தீர்மானங்கள் ஏற்கப்பட்டது குறித்து பேசினர். உடுமலை ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை