உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலைவாய்ப்பு பயிற்சி: பதிவு செய்ய அவகாசம்

வேலைவாய்ப்பு பயிற்சி: பதிவு செய்ய அவகாசம்

உடுமலை : வேலைவாய்ப்பு பயிற்சிக்கு மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் இன்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு, வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., - டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு படித்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சி அளித்து, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.இதற்கு, மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இதற்கான வயது வரம்பு, 21 முதல் 24 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://pminternship.mca.gov.in/login என்கிற முகவரியை பார்வையிடலாம்.இவ்வாறு, அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி