உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காலி மது பாட்டில் விவகாரம் மதுக்கடை பார் நடத்துவோர் புகார்

 காலி மது பாட்டில் விவகாரம் மதுக்கடை பார் நடத்துவோர் புகார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில், காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் விவகாரத்தில் தாங்கள் மிரட்டப்படுவதாக பார் உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில், 244 மதுக்கடை பார்கள் உள்ளன. இவற்றில் சேகரமாகும் காலி மது பாட்டில்கள் பார் உரிமையாளர் சேகரித்துக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலி மது பாட்டில் சேகரிக்க ஏலம் எடுத்துள்ளதாக கூறி மூன்று நிறுவனத்தினர், பாட்டில்களை எடுக்க வந்தனர். இதனால், இரு தரப்பிடையே சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் பார் உரிமையாளர்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளரைச் சந்தித்து முறையிட்டனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால், நேற்று காலை பார் உரிமையாளர்கள் கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி. ஆகியோரிடம் புகார் அளித்தனர். அந்த மனுவில், 'பார் உரிமம் எடுத்தது முதல் காலி பாட்டில்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். அதனடிப்படையில் தான் டி.டி. செலுத்துகிறோம். தற்போது ஏலம் எடுத்ததாக கூறும் நிறுவனத்தினர் எங்களுடன் தகராறு செய்து பாட்டில்களை சேகரிக்கின்றனர். இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ளனர். மதுக்கடை மூடல் பார் உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாக காலி மது பாட்டில் விவகாரம் குறித்து ஒன்று கூடி ஆலோசித்து அதிகாரிகளைச் சந்தித்து புகார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னை குறித்து அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்த முருகன் என்பவர், கொங்கு மெயின் ரோட்டில், உள்ள மதுக்கடையில் பார் வைத்துள்ளார். நேற்று அந்த கடை திறக்கப்படவில்லை. 'கலெக்டரிடம் புகார் அளிக்க ஆட்களைத் திரட்டி சென்றதால் இந்த கடையை திறக்க வேண்டாம்,' என மாவட்ட மேலாளர் தெரிவித்தார். இது குறித்து விவரம் கேட்க மாவட்ட மேலாளர் ராஜசேகரை தொடர்பு கொண்ட போது அவர் மொபைல் போன் 'ஆப்' செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை