மேலும் செய்திகள்
அ.தி.மு.க., முழு ஆதரவு
18-Dec-2024
அவிநாசி; திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதிக்கு அவிநாசி நகர தி.மு.க., சார்பில், ஆளுயுர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அவிநாசியில் சேலம் - கொச்சி பைபாஸ் ரோடு, திருப்பூர் ரோடு சந்திப்பில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அவிநாசி சட்டமன்ற தி.மு.க., பொறுப்பாளர் டாக்டர் கோகுல் கிருபாசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பழனிசாமி, பால்ராஜ், நகர செயலாளர் வசந்தகுமார், பூண்டி நகராட்சி தலைவர் குமார், அவிநாசி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
18-Dec-2024