மேலும் செய்திகள்
கோயில்களில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு
21-Jun-2025
அனுப்பர்பாளையம்; -திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு, பிச்சம்பாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் பங்களிப்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.நன்கொடையாளர் பங்களிப்பின் வாயிலாக, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவிலின் கிழக்கு புற நுழைவாயில் வளைவு கட்டப்பட உள்ளது.அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில், கோவில் செயல் அலுவலர் வளர்மதி, அறங்காவலர் குழு தலைவர் சவுந்திரம், வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் நடராஜன், மூர்த்தி, காளிமுத்து, சின்னசாமி, வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
21-Jun-2025