உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுரை போட்டி பரிசளிப்பு

கட்டுரை போட்டி பரிசளிப்பு

அவிநாசியில் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, குருபாதம் சித்தர் மடம் அறக்கட்டளை இணைந்து சங்கத்தமிழன் சரித்திர நுால்கள் குறித்து நடத்திய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. பொங்கலுார், அகில உலக ஆன்மிக பேரவை தெய்வசிகாமணி சுவாமிகள், மருதமலை அடிவாரம் பிரம்மஞானம் அறக்கட்டளை ஏழுமலை சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர். சித்தர்பீடம் இலங்கை ஆன்மிக கலை இலக்கிய செயற்பாட்டாளர் விக்ரமசிங், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தமிழ் இலக்கிய சங்க தலைவர் அனிதா, சசிக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். அறக்கட்டளை நிறுவன தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார், குருபாதம் சித்தர் மடம் அறக்கட்டளை நிறுவன தலைவர் வெள்ளியங்கிரி சுவாமிகள், செயலாளர் பாலு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !