உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / என்றென்றும் மாறாத பசுமை நினைவுகள்

என்றென்றும் மாறாத பசுமை நினைவுகள்

பல்லடம்,;பல்லடம் அடுத்த, சின்னக்கரை பார்க் மெட்ரிக் பள்ளியில், 1990 முதல் 2003ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் நேற்று சந்தித்தனர். ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள், 40 பேர், தங்கள் பெயர், ஊர், தொழில், வேலை, குடும்பம் குறித்து பகிர்ந்து கொண்டனர். பள்ளிப் பருவத்தின் போது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம், அனைவரும் இணைந்து சமூக சேவையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மதிய உணவுடன் சந்திப்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை