மேலும் செய்திகள்
125 அரசு கல்லுாரிகளில் நுாலகர் பணியிடங்கள் காலி
28-Sep-2025
- நமது நிருபர் -அரசு கல்லுாரிகளில் கற்றல், கற்பித்தல் மேம்பட, கல்லுாரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெற, உதவி பேராசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும் என பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா, எல்.ஆர்.ஜி., மகளிர், தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம் ஆகிய கல்லுாரிகள் உள்ளன. அதிக மாணவர், மாணவியர் (808 இடங்கள்) படிக்கும் கல்லுாரியாக, சிக்கண்ணா உள்ளது. பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் அதிக மாணவியர் (1085 இடங்கள்) படிக்கின்றனர்.புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளை விட, இக்கல்லுாரிகளுக்கு உதவி பேராசிரியர் நியமனம் உடனடி தேவையாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில், 60 - 80 பணியிடம் காலியாக உள்ளது. நடப்பு கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வு துவங்க உள்ளது. அரசு கல்லுாரிகளில் கற்றல், கற்பித்தல் மேம்பட, கல்லுாரிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெற, உதவி பேராசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
28-Sep-2025