நுாலகத்தை விரிவுபடுத்துங்க வாசகர்கள் எதிர்பார்ப்பு
உடுமலை, ; போடிபட்டி கிளை நுாலகத்தை, அடிப்படை வசதிகளுடன் விரிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில், கிளை நுாலகம் உள்ளது. போடிபட்டி பிரதான ரோட்டில் இருக்கும் இந்த நுாலகத்தில், அடிப்படை வசதிகள் இருப்பினும், இடப்பற்றாக்குறையாக இருப்பதால் வாசகர்கள் அதிருப்திக்குள்ளகின்றனர்.சுற்றுசுவர் இல்லாததால், விடுமுறை நாட்களில் 'குடி'மகன்கள் நுாலக கட்டடத்தை சூழ்ந்து கொள்கின்றனர். பாட்டில்களாகவும், பிளாஸ்டிக் டம்ளர்களாகவும் கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.நுாலகத்திற்கு இணையதள வசதிக்கான தளவாடங்கள் வந்துள்ளது. ஆனால், அவற்றை பொருத்தி வைப்பதற்கும், அதை வாசகர்கள் பயன்படுத்துவதற்கும் இடவசதி இல்லை.போடிபட்டி சுற்றுப்பகுதியிலிருந்து, நாள்தோறும் இருபதுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்துகின்றனர். இடவசதி இல்லாததால், பலரும் ஆர்வம் இருந்தும் நுாலகத்தை பயன்படுத்துவதில்லை. நுாலகத்தை அடிப்படை வசதிகளுடன் விரிவுபடுத்த வேண்டுமென, வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.