உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காலை உணவு திட்டம் விரிவாக்கம்; திருப்பூரில் 29 பள்ளிகள் தேர்வு

காலை உணவு திட்டம் விரிவாக்கம்; திருப்பூரில் 29 பள்ளிகள் தேர்வு

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில், நடைபெற்றது. அதன்பின், கலெக்டர் கூறியதாவது:காலை உணவருந்தாமல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உணவருந்தி, சோர்வின்றி கல்வி பயிலும் நோக்கில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.திருப்பூரில், 1,188 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 66 ஆயிரத்து 759 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில், 29 அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 3,492 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதற்கான கட்டமைப்பு அப்பள்ளிகளில் உள்ளதா என, துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ேஹமலதா, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை