மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்
02-Nov-2025
அவிநாசி: அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நேற்று துவங்கியது. இது குறித்து, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் கூட்டத்தில், அனைத்து கட்சி நிர்வாகிகள், பூத் ஏஜன்ட்கள் பங்கேற்றனர். இதில், அவிநாசி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விளக்கப்பட்டது. தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஸ்ரீ நந்தினி தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உஷாராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அவிநாசி, சேவூர் வட்டார பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், பூத் ஏஜன்ட்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கட்சி நிர்வாகிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, தேர்தல் பிரிவு அதிகாரிகள் பதில் அளித்தனர்.
02-Nov-2025