உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லட்சங்கள் பறிப்பு; மோசடிக்கும்பல் செழிப்பு மெத்தப்படித்தவர்களிடமும் மொத்தமாக சுருட்டல்

லட்சங்கள் பறிப்பு; மோசடிக்கும்பல் செழிப்பு மெத்தப்படித்தவர்களிடமும் மொத்தமாக சுருட்டல்

திருப்பூர் மாவட்டத்தில் சமீப காலமாக பங்குச்சந்தை முதலீடு போன்றவற்றில், அதிக லாபம் தருவதாக கூறும் மோசடி கும்பல்களின் வலையில் பலரும் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். சில மாதங்கள் முன் பெண் டாக்டர் ஒருவர் முதலீடு செய்து, 1.73 கோடி ரூபாயை பறிகொடுத்தார். ஓய்வு பெற்ற இன்ஜினியர் ஒருவர், 71 லட்சம் ரூபாய், ஐ.டி., பணியாளர், 18.35 லட்சம் ரூபாயை பறிகொடுத்தனர். சமீபத்தில் டாக்டர் ஒருவர் 77 லட்சம் ரூபாயைப் பறிகொடுத்தார். விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால், ஏமாற்றுவோர் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பர்.

ணையவழி பொருளாதாரக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப சேவைகளை முறைகேடாக பயன்படுத்துதல், இ-மெயில் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் மிரட்டுதல், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்தல், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து தகவல்கள் திருடுதல், பிறரது தகவல் மற்றும் 'போட்டோ'க்களை சித்தரித்து பயன்படுத்துதல் போன்ற பல்வேறு 'சைபர்' குற்றங்கள் அதிகரித்துள்ளன.

போலீஸ் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் மக்கள் தங்களை பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். நீண்ட காலமாக சேமித்து வைக்கும் தொகையை, தங்கள் பேராசையால், சில நிமிடங்களில் இழந்து விடுகின்றனர்.சமீப காலமாக, பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், ஓட்டல் ரீவ்யூ செய்வது, விளம்பர 'டாஸ்க்'களை முடிப்பதால் அதிக லாபம், லோன் ஆப்களில் கடன் என, பல நுாதனமான விளம்பரங்களை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்து பணத்தை இழந்து வருகின்றனர்.

பர் கிரைம் போலீசார் கூறியதாவது: வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல், பலரும் உள்ளனர். ஏமாந்த பின்பே, உண்மையை தெரிந்து கொள்கின்றனர். மக்களின் அறியாமை, பேராசை போன்றவற்றை பயன்படுத்தி கும்பல்கள் பணத்தை எளிமையாக மோசடி செய்கின்றனர். படிக்காதவர்களை காட்டிலும், படித்தவர்கள் பெரும் பணத்தை இழக்கின்றனர். தொழில் நுட்ப ரீதியாக, பணத்தை கையாளும் முக்கிய பொறுப்பு, பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், டாக்டர்கள், ஆடிட்டர்கள், ஐ.டி., பணியாளர்கள் என மெத்தப் படித்து சமுதாயத்தில் முக்கிய நபர்களாக வலம் வருபவர்கள் கூட, ஏமாறுவது வேதனையாக உள்ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கூட, குடும்பத்துக்கு பெரும் வருவாயை பெற்று தருவதாக நினைத்து, நீண்ட கால சேமிப்பை முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். சில மோசடிகளில் வெளியே சொல்ல தயங்கி கொண்டு, மூடி மறைத்து விடுகின்றனர்.

எக்காரணத்தை கொண்டும் வங்கி விபரங்களை பகிரக்கூடாது. இதுபோன்று ஏதாவது சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனடியாக போலீசாரை அணுக வேண்டும். இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என போலி விளம்பரங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ