உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொட்டியில் விழுந்து பலி

தொட்டியில் விழுந்து பலி

மதுரையை சேர்ந்தவர் நாகலிங்கம், 60. இவர் இடுவாய், பாரதிபுரத்தில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று ஆண்டிபாளையம் அருகே உள்ள சாய சலவை ஆலையில் பெயின்டிங் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, நாகலிங்கம் மூடப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாய கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். தகவலின் பேரில், திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள்,கழிவு நீர் தொட்டியில் மூழ்கிய நாகலிங்கத்தை மீட்டனர். ஆனால், அவர் இறந்து விட்டார். இது குறித்து திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி