உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வக்கீல் சடலத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்

வக்கீல் சடலத்தை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்

திருப்பூர்; தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 41; ஐகோர்ட் வக்கீல். கடந்த 28ம் தேதி தாராபுரத்தில் வெட்டி கொல்லப்பட்டார். இவரது சித்தப்பா தண்டபாணி உள்பட 12 பேர் கைதாகினர். வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வலியுறுத்தி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முருகானந்தம் உடலை குடும்பத்தினர் கடந்த ஒரு வாரமாக வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து, கொலை வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என, முருகானந்தம் தாய் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், வழக்கை மேற்கு மண்டல ஐ.ஜி., மேற்பார்வையில், டி.எஸ்.பி., விசாரித்து, 90 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. இச்சூழலில், கோர்ட் அறிவுறுத்தலின் அடிப்படையில் குடும்பத்தினர் முருகானந்தம் உடலை நேற்று பெற்று கொண்டனர். தாராபுரத்தில் வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ