மேலும் செய்திகள்
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
பல்லடம்; பல்லடம் அடுத்த, சேகாம்பாளையம்- - சேடபாளையம் செல்லும் ரோட்டில், அரசு பள்ளிகள், குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள ரோட்டில் 'பண்ணை குட்டைகள்' போல், பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன.பொதுமக்கள் கூறுகையில், ''நான்கு ஆண்டுகள் முன் பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பின், இந்த ரோடு சீரமைக்கப்பட்டது.ஐந்து ஆண்டு முடிவதற்குள் ரோடு தேய்ந்து, மழை நீரில் கரைந்து சென்றதால், மீண்டும், குண்டும் குழியுமாக மாறிவிட்டது. குண்டும், குழியுமாக உள்ள இந்த ரோட்டை கடப்பது சாகசம் செய்வதற்கு நிகரானது. ரோட்டை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
10-Dec-2024