மேலும் செய்திகள்
உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர் பதிவு முகாம்
26-Dec-2024
உடுமலை : உழவர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றனர். 2.50 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம் வைத்துள்ளவர்களும்; விவசாயம் சார்ந்த கூலித்தொழில் செய்வோரும் இந்த திட்டத்தில் உறுப்பினராக இணையலாம்.திட்டத்தில், விபத்து மரண உதவித்தொகை, 1 லட்சம் ரூபாய்; இயற்கை மரண உதவித்தொகை, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 2,500 ரூபாய் வழங்கப்படும்.இதுதவிர, மகனின் திருமணத்துக்கு, 8 ஆயிரம் ரூபாயும், மகளின் திருமணத்துக்கு, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.உறுப்பினர்களின் குழந்தைகளில் கல்லுாரி படிப்புக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உறுப்பினர்களுக்கு, 30க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புக்கு, தற்காலிக இயலாமை உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 75 பேர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்ய, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் தலைமையில், வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் பங்கேற்று, உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.திருப்பூர் மாவட்ட விவசாயிகள், நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
26-Dec-2024