மேலும் செய்திகள்
'குடி'மகன்களின் கூடாரமாகும் நகர் நல மையங்கள்
07-May-2025
பொங்கலுார் : கம்பு, சோளம், தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் கடுமையான வெப்பத்தையும், வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. பசுமைப் புரட்சிக்கு முன் பெரும்பாலான விவசாயிகள் சிறுதானியங்களையே முதன்மை பயிராக சாகுபடி செய்து வந்தனர்.காலப்போக்கில் இதன் உற்பத்தி குறைந்த போதிலும் தொடர்ந்து பல விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சிறுதானியங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்கிறது. கோடைகாலத்தில் சிறுதானியங்களை விதைக்கும் போது அவற்றின் வேர் முடிச்சுகளில் உள்ள பாக்டீரியாக்கள் மண்ணுக்கு தேவையான சத்தை நிலை நிறுத்துகின்றன. மண்ணை வளப்படுத்தவும் சிறுதானியங்கள் பயன்படுகிறது.கோடை காலத்தில் இவை நல்ல விளைச்சல் கொடுக்கும். தற்பொழுது கோடை மழை பெய்து வருவதால் இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
07-May-2025