உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மார்க்கெட்டில் விலை பரவாயில்ல மஞ்சளுக்கு மாறிய விவசாயிகள்

மார்க்கெட்டில் விலை பரவாயில்ல மஞ்சளுக்கு மாறிய விவசாயிகள்

அவிநாசி : அவிநாசி மற்றும் சேவூர் சுற்றுவட்டார பகுதிகள், வானம் பார்த்த பூமிகளாக உள்ளன. நிலக்கடலை, வாழை சாகுபடி தான், இங்குள்ள விவசாயிகளின் பிரதான விவசாயம்.விளைவிக்கப்படும் வாழை, பெரும்பாலும் சிப்ஸ் தயாரிப்புக்கென கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோன்று விளைவிக்கப்படும் நிலக்கடலை, சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வாயிலாக விற்கப்படுகிறது.கடலை மிட்டாய், எண்ணெய் தயாரிப்புக்கு அவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை, விவசாயிகள் பலர், வழக்கத்துக்கு மாறாக, மஞ்சள் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.வேளாண், தோட்டக்கலை துறையினர் கூறியதாவது:சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை, வாழை சாகுபடி தான் பிரதானம். சிறிய பரப்பில் மஞ்சள் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த, 3 ஆண்டாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஈடுபடாத நிலையில், இம்முறை மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.குறிப்பாக, முறியாண்டம்பாளையம், பெரிய காட்டுபாளையம், சின்ன காட்டுப்பாளையம் உள்ளிட்ட சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், வாழை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், இம்முறை மஞ்சள் சாகுபடிக்கு மாறியுள்ளனர். மஞ்சளுக்கு வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்து வருவது தான் இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை