கைத்தறி ஆடை அணிந்து பேஷன் ேஷா
ந ம் நாட்டில் தயாராகும் கைத்தறித்துணி களுக்கு உலகளாவிய வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், இவற்றைச் சந்தைப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும்கூடுதல் அக்கறைகாட்டினால், கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்படும். இதற்கான ஆர்வத்தை ஊட்டுகிறார்கள், திருப்பூர், முதலிபாளையம், 'நிப்ட்-டீ' பேஷன் கல்லுாரி மாணவ, மாணவியர். தேசிய கைத்தறி தினத்தையொட்டி, இவர்கள் விதவிதமான வண்ணமயமான கைத்தறி ஆடைகளை அணிந்து வந்து பேஷன் ேஷா நடத்தினர். இவை யனைத்தும், மாணவ, மாணவியரே வடிவமைத்த ஆடை ரகங்கள். கைத்தறி ஆடைகள் மீதான கவனத்தை ஈர்க்கவைத்த மாணவ, மாணவியருக்கு தாராளமாக, சபாஷ் சொல்லலாம்.