உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலுவலர்கள் குடியிருப்பில் தீ; போராடி அணைப்பு

அலுவலர்கள் குடியிருப்பில் தீ; போராடி அணைப்பு

உடுமலை; உடுமலை அருகே பெரியகோட்டை பிரிவில், மின்வாரியத்தின் துணை மின்நிலையமும், அருகில், அலுவலர்கள், ஊழியர்கள் குடியிருப்பும் அமைந்துள்ளது.இந்த குடியிருப்பிலுள்ள காலியிடத்தில், நேற்று திடீரென தீப்பற்றி, காய்ந்து கிடந்த புற்கள் கொழுந்து விட்டு எரிய துவங்கியது.தகவல் கிடைத்த உடுமலை தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று போராடி தீயை அணைத்தனர். பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது. துணை மின் நிலையம் அருகில், தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை