அவிநாசி அரசு மருத்துவமனையில் முதன்முறை நுண்துளை ஆபரேஷன்
அவிநாசி; அவிநாசி அரசு மருத்துவமனையில் நாள்பட்ட பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பை கற்கள் நோய் பாதிப்பிற்குள்ளான 53 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்திருந்தார்.இவருக்கு தலைமை மருத்துவர் பாலாஜி தலைமையில், அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்பாபு, ரங்கநாதன் மற்றும் மயக்க மருந்து நிபுணர் செந்தில்குமார் ஆகியோர் மூலம் நாள்பட்ட பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பை கற்கள் நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுபோன்ற அறுவை சிகிச்சை அவிநாசி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை. அறுவை சிகிச்சை மாவட்ட இணை இயக்குனர் மீரா ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டது.