உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகர எல்லைக்குள் பறக்கும் வாகனங்கள் உடனடி நடவடிக்கை தேவை

நகர எல்லைக்குள் பறக்கும் வாகனங்கள் உடனடி நடவடிக்கை தேவை

உடுமலை, ;உடுமலை நகர எல்லைக்குள், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், நகருக்குள் வந்து செல்கின்றன.இந்நிலையில், நகர எல்லையான கொழுமம் ரோடு சந்திப்பில் இருந்து, ராஜவாய்க்கால் பள்ளம் வரை, விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.ஆனால், இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், நெடுஞ்சாலையில், வாகனங்கள் செல்லும் பகுதி வெகுவாக குறைந்துள்ளது. இப்பிரச்னையால், நெரிசல் அதிகரித்து சந்திப்பு பகுதிகளில், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.உடுமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், விதிமுறைகளை கண்டுகொள்ளாமல், அதிவேகத்தில் பறக்கும் வாகனங்களால், பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.முன்பு, நகர எல்லைக்குள் வாகனங்களின் வேகம், 30 கி.மீ., என வரையறை செய்யப்பட்டு, அதற்கான தகவல் பலகைகளும், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வைக்கப்பட்டன.இந்த பலகைகள் மாயமான நிலையில், அதிவேக வாகனங்களை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், குறுகலான நகர ரோடுகளில், அதிக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, நகர எல்லையில், வேகக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.வேகத்தை கண்டறியும் 'ஸ்பீடு கன்' போன்ற உபகரணங்களை, போக்குவரத்து போலீசாருக்கு வழங்கி ஆய்வு நடத்துவது அவசியமாகும்.வட்டார போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இணைந்து, இப்பணிகளை உடனடியாக செய்வது விபத்துகளை தவிர்க்க உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ