உள்ளூர் செய்திகள்

உணவுத்திருவிழா

திருப்பூர்: திருப்பூர் மாஸ்கோ நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், உணவுத்திருவிழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு வரவேற்றார். 28வது வார்டு கவுன்சிலர் சேகர் தலைமை வகித்தார். வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சியாமளா மற்றும் பாலமுருகன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பல்வேறு வகை பாரம்பரிய உணவு, சிறுதானிய உணவு, உணவே மருந்து, பல மாநில, மாவட்ட சிறப்பு உணவு, உண்ணக்கூடாத உணவு ஆகிய தலைப்புகளின் கீழ் ஐந்து அறைகளில் உணவு பதார்த்தங்களை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் காட்சிப்படுத்தியிருந்தனர். உணவுத்திருவிழா கண்காட்சி அரங்கை பெற்றோர் பார்வையிட்டு, வியந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை