உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுமைப்பணியாளர் நலனுக்காக மூட்டை 50 கிலோ மிகக்கூடாது

சுமைப்பணியாளர் நலனுக்காக மூட்டை 50 கிலோ மிகக்கூடாது

திருப்பூர்: ''சுமைப்பணியாளர் நலனுக்காக 50 கிலோவுக்கு மிகாமல் மூட்டை தயாரிக்கப்பட வேண்டும்'' என்று ஏ.ஐ.டி.யு.சி. கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சங்க 47வது மகாசபை கூட்டம், ஊத்துக்குளி ரோடு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் நடராஜன், தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். எம்.பி., சுப்பராயன், நிர்வாகிகள் சந்திரன், சேகர், மோகன் ஆகியோர் பேசினர். மாவட்ட தலைவராக பழனிசாமி, பொதுசெயலாளராக ரவி, பொருளாளராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூரில், ஆயிரக்கணக்கானோர், தெருவோர வியாபாரிகளாக உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் கணக்கெடுப்பு நடத்தி, தனி குழு மூலமாக அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, பாதுகாக்க வேண்டும். சுமைப்பணியாளர் நலன் கருதி, 50 கிலோவுக்கு மிகாமல் மூட்டை தயாரிக்க வேண்டும். சுமைப்பணியாளருக்கு, கழிப்பிடம், குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். இடமில்லாதவருக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4 மாதமாக நடக்காத: கண்காணிப்புக்குழு கூட்டம்: கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டத்தை, மாதாமாதம் நடத்தி, தொழிலாளர்களுக்கான நலவாரிய பணிகளை ஊக்குவிக்க வேண்டும். மாவட்டத்தில், நான்கு மாதங்களாக கண்காணிப்பு குழு கூடவில்லை; தொழிலாளர் பயன்பெறுவதும் தடைபடுகிறது. மாதம் தோறும் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மகாசபையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை