உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய அரசு பணிக்கான தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

மத்திய அரசு பணிக்கான தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

திருப்பூர்; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக ஏழாவது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மத்திய அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடைபெற்றது. எஸ்.எஸ்.சி., -ஆர்.ஆர்.பி., -ஐ.பி.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில், 45 பேர் இணைந்துள்ளனர். வேலைவாய்ப்பு துறை கோவை மண்டல இணை இயக்குனர் ஜோதி மணி, பயிற்சி வகுப்பை துவக்கிவைத்தார். கலெக்டரின் தன்னார்வ நிதி ரூ.1.35 லட்சத்தில், வேலைவாய்ப்பு அலுவலக நுாலகம் சீரமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை தேர்வுக்கு ஏற்ப வகைப்படுத்தி வைப்பதற்கு பீரோ, செய்தித்தாள் ஸ்டேண்ட், படிப்பதற்கு கூடுதல் டேபிள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நுாலக செயல்பாடுகளை இணை இயக்குனர்பார்வையிட்டார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நுாலகத்தில், மொத்தம் 2,500 புத்தகங்கள் உள்ளன. அனைத்து புத்தகங்களும் ஒருசேர வைக்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடிப்பிடித்து படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கலெக்டரின் தன்னார்வ நிதியில், நுாலக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.சி., - பேங்க் தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., - யு.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., என தற்போது தேர்வு வாரியாக, தனித்தனி ரேக்குகளில் புத்தகங்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மிக சுலப மாக தேவையான புத்தகத்தை எடுத்து படிக்கலாம், என்றார். மாவட்ட உதவி வேலைவாய்ப்பு அலுவலர் வைஷாலி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை