உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரன்ட்லைன் மிலேனியம் மாணவர்கள் அபாரம்

பிரன்ட்லைன் மிலேனியம் மாணவர்கள் அபாரம்

திருப்பூர்: தெக்கலுார், ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த மாவட்ட தடகள போட்டியில் திருப்பூர், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.12 வயது பிரிவு, குண்டுஎறிதல், ஹரிஷ்கணேஷ் முதலிடம், 14 வயது பிரிவு, உயரம் தாண்டுதல், தனிஷ் இரண்டாமிடம், 200 மீ., ஓட்டம் அபிேஷக் மூன்றாமிடம். மாணவியர் பிரிவில் பவிஷ்யா முதலிடம், திசா மூன்றாமிடம். தட்டு எறிதல் சங்கமித்ரா மூன்றாமிடம்.பதினாறு வயது உயரம் தாண்டுதல் சிவபிரகாஷ் இரண்டாமிடம், மாணவியர் பிரிவு ரக் ஷிதா முதலிடம். 19 வயது பிரிவு உயரம் தாண்டுதல் பிரணவ் அருண் முதலிடம், மாணவியர் பிரிவு 400 மீ. ஓட்டம், யோகசஷ்டிகா, பிரதிஷா, அபிதனுஷ்கா மற்றும் திக் ஷதா மூன்றாமிடம்.சாதனை படைத்த மாணவ, மாணவியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோரை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவிநந்தன், பள்ளி முதல்வர் லாவண்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !