பிரன்ட்லைன் பள்ளி மாணவர் கேலோ இந்தியாவுக்கு தேர்வு
திருப்பூர்: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் உ.பி. மாநிலம், லக்னோவில் நடந்தது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், 6 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி, பிளஸ் 2 மாணவர் பிரணவ் அருண், 17 வயது பிரிவு, உயரம் தாண்டுதலில் பங்கேற்று, 1.96 மீ. தாண்டி சாதனை படைத்தார். இதனால், இவர் 2026 ஜூனில் நடைபெறும் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று நம் மாநிலத்துக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் இருவரையும் பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.