பழச் செடிகள் வீணடிப்பு
விவசாயிகளுக்கு பழச் செடிகளை மானிய விலையில் வழங்குவதற்காக பொங்கலுார் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, பலா, கறிவேப்பிலை உள்ளிட்ட செடிகள் இருப்பு வைக்கப்பட்டன. நான்கு பழ மரக்கன்றுகள், 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. வினியோகிக்கப்படாத செடிகள், பொங்கலுார் ஊராட்சி ஒன்றியத்தின் பழைய கட்டடத்தில் ஒரு மூலையில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்ட செடிகளில் பெரும் பகுதி கருகி வருகிறது. அவற்றை விவசாயிகளுக்கு வழங்கியிருந்தால் மழைக்காலம் முடிவதற்குள் அவர்கள் நடவு செய்து இருப்பர்.