உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 250 ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை

 மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 250 ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை

தி ருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 2,500 முதல் 2,800 பேர் வரை சிகிச்சை பெற வருகின்றனர்; 500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மருத்துவமனையில், 250 ரூபாய்க்கு ஆரம்ப கட்ட முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இ.சி.ஜி. எக்ஸ்ரே, சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனை, அடிப்படை கல்லீரல் செயல்பாட்டு சோதனை உள்ளிட்ட ஆறு ஆரம்ப நிலை முழு உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பரிசோதனைக்கு பின், டாக்டர் ஆலோசனை இலவசம். பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோர், 99444 13576 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை