மேலும் செய்திகள்
டாஸ்மாக் ஊழியர் அரசுக்கு எதிர்ப்பு
02-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் (இ.கம்யூ.) கலெக்டரிடம் அளித்த மனு; திருப்பூர் வடக்கு தாலுகா பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த கார்டுதாரர்கள், ஒரே நாடு; ஒரே கார்டு திட்டத்தில் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால், மாதந்தோறும், 23ம் தேதிக்கு முன்பே பொருட்கள் தீர்ந்து விடுகிறது. எனவே, கடைகளுக்கு 10 சதவீதம் பொருள் கூடுதலாக வழங்க வேண்டும். பொருள் இல்லை என்று கூறும் போது, கடை ஊழியர்களுடன் கார்டுதாரர்கள் வாக்குவாதம் செய்கின்றனர். இதனால் ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடைகளுக்கு தேவையான அளவில் பொருட்கள் மாதம் தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
02-Sep-2025