உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை

பலன்கள் தரும் பவுர்ணமி பூஜை

உடுமலை; பவுர்ணமி தினத்தில், சிவசக்தியை வழிபடுவதால், குடும்பத்தில் இருள் நீங்கி ஒளி உண்டாகும். பல்வேறு நன்மைகள் தரும் பவுர்ணமி பூஜை உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.பிரதிமாதம் பவுர்ணமி நாளன்று, சந்திரன் பூரண கலையுடன் பிரகாசிக்கும் நல்வேளையில், மக்கள் நலன் கருதி, மிக அபூர்வமான, அற்புதமான வழிபாடுகள் முறையாகவும், திருத்தமாகவும், வேத விற்பன்னர்களை கொண்டு அந்தந்த மாதங்களுக்கு உரிய பூஜைகள் பொலிவோடு நடைபெற்று வருகிறது.பவுர்ணமி பூஜை செய்யும் நபர்கள் அன்றைய தினத்தில் உபவாசம் இருந்து அம்மனை வழிபட்டால் சகல சவுபாக்கியத்துடன் வாழலாம். கோவிலில், அந்நாளில், 28 வகையான ேஹாமம் மற்றும் இதர பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை