உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானிய விலையில் பூஞ்சான கொல்லி மருந்து

மானிய விலையில் பூஞ்சான கொல்லி மருந்து

உடுமலை:உடுமலை வேளாண் துறை சார்பில், பூஞ்சான கொல்லி மருந்து மானிய விலையில் வழங்கப்படுகிறது.உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது: உடுமலை வேளாண் துறை சார்பில், டிரைகோடெர்மா விரிடி என்னும் பூஞ்சான கொல்லி, 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.தென்னையில் மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடும் போது, தென்னை வாடல் நோய் மற்றும் அனைத்து விதமான பூஞ்சான நோய்களை தவிர்க்கலாம். ஒரு மரத்திற்கு, 200 கிராம் வீதம் பயன்படுத்தலாம்.இந்த பூஞ்சான கொல்லி, உடுமலை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், சாளையூர், குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. தேவையான விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை