உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிறப்பு வழிபாட்டுடன் இன்று துவக்கம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; சிறப்பு வழிபாட்டுடன் இன்று துவக்கம்

திருப்பூர்; திருப்பூர் மாநகரில் ஆயிரம் உட்பட மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிசத், சிவசேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்கின்றனர். தொடர்ந்து, இன்று முதல், நான்கு நாட்களுக்கு, மூன்று வேளை பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்டவை வழங்க உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. திருப்பூர் மாநகரில் வரும், 30ம் தேதி ஹிந்து முன்னணி விசர்ஜனம் ஊர்வலம் நடக்கிறது. ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி இன்று முதல் மாநகரில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், வழிபாட்டு தலம், முக்கியமான சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விசர்ஜனம் ஊர்வலம் நடக்கும் நாள் வரை என, நான்கு நாட்களுக்கும் அன்றாடம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஊர்வலம் நடக்கும் நாளில், கமிஷனர் தலைமையில், 800 முதல் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஊர்வலம் நடக்கும் பகுதியில், இதற்கு முன் நகரில் பணியாற்றிய வெளிமாவட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து, மாநகரம், புறநகர் உள்ளிட்ட பகுதியில் சுழற்சி முறையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி தாராபுரத்தில் மாவட்ட எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் நேற்று மாலை போலீசார் கொடி அணி வகுப்பில் பங்கேற்றனர். நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்ததுதமிழ்நாடு வி.ஹெச்.பி., சார்பில், காங்கயம் நகரில், 15 இடங்களில் விநாயகர் சிலையை நேற்று பிரதிஷ்டை செய்தனர். மயில்மீது அமர்ந்த விநாயகர், சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகர், ஆஞ்சநேய விநாயகர் என பல்வேறு வடிவங்களில் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று காலை கணபதி ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட உள்ளது. மாலை 3:00 மணியளவில் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பழையகோட்டை ரோடு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவு பெறுகிறது. அதன்பின், கீழ்பவானி வாய்க்காலில் சிலை கரைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை