உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சலுான் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய கும்பல்

சலுான் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய கும்பல்

பல்லடம்; பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டை சேர்ந்தவர் கவியரசன், 30. சலுான் உரிமையாளர். நேற்று காலை, சலுானில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கவியரசனை, ஐந்து பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது. தலை, கை மற்றும் உடம்பில் பலத்த காயங்களுடன், கவியரசன், பல்லடம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கவியரசன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பிரதீப். 26, தாமரைசந்திரன், 24, கோபால், 27, பார்த்திபன், 30, மற்றும் ஒருவர் உட்பட ஐந்து பேரும் தலைமறைவாக உள்ளனர். நான்கு பேர் மீதும் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ