மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்
07-May-2025
திருப்பூர்; திருப்பூர் - பல்லடம் ரோட்டில், ஏழு தளங்களுடன், 32 அரசு துறைகளை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலக வளாகம் செயல்படுகிறது. வாரந்தோறும் திங்கள் கிழமை நடை பெறும் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, பொதுமக்கள் 500 முதல் 800 பேர் வரை வந்து செல்கின்றனர்.மருத்துவ காப்பீடு பதிவு, ஆதார் பதிவு, சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துக்கு என, வாரத்தின் அனைத்து நாட்களும் மக்கள் ஏராளமானோர் கலெக்டர் அவலகத்துக்கு வந்துசென்கின்றனர்; அதேபோல், அரசு துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மூன்று டீக்கடைகள் செயல்படுகின்றன. அரசு அலுவலக குப்பைகள், டீ க்கடை குப்பைகள், வளாகத்திலுள்ள குப்பை தொட்டியில் போடப்படுகின்றன. மாநகராட்சி பணியாளர்கள், உடனுக்குடன் அவற்றை அப்புறப்படுத்தி வந்தனர்.ஆனால், கடந்த மூன்று நாட்களாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் குப்பை அகற்றும்பணி நடைபெறவில்லை. இதனால், குப்பைகள் தேங்கியுள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் டீ கப், டீ துாள், பயன்படுத்திய காகிதம் என பலவிதமான கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுகளை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
07-May-2025