அங்கன்வாடி அருகே கழிவுகளை அகற்றியாச்சு: தினமலர் செய்தி எதிரொலி
உடுமலை : 'தினமலர் செய்தி' எதிரொலியாக, போடிபட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு, வேலி அமைக்கப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.குழந்தைகள் பராமரிக்கப்படும் பகுதி துாய்மையாக இல்லாமல், மையத்தை சுற்றிலும் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும், கற்கள் குவிக்கப்பட்டும், முறையான பராமரிப்பில்லாமல் புதர்ச்செடிகளாக வளர்ந்தும் இருந்தன.அவற்றை முறையாக அப்புறப்படுத்தி, அங்கன்வாடி மையத்தின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதி முழுவதும் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து கழிவுகள் கொட்டாமல் இருப்பதற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'மையத்தின் முன்பு கழிவுகள் கொட்டாமல் இருப்பதற்கு, பலமுறை பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாக கண்காணிப்பு கேமரா வாயிலாகவும் கண்காணிக்கப்படுகிறது,' என்றனர்.