உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

பொங்கலுார், பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணி திட்ட முகாம், பொங்கலுார் அருகேயுள்ள காட்டூரில் நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக பொது மருத்துவ முகாம் நடந்தது. அதில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர்கள் சுந்தரவேல், நாகராஜ், சித்த மருத்துவ அலுவலர் வேல்விழி, மருத்துவர் நுார்முகமது, சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !